4 தென் பகுதி மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் கைது

அரபிக் கடலில் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்ட பின்னர் இந்திய கடல் எல்லைப் பகுதியூடாக திரும்பிக் கொண்டிருந்த மாத்தறை மீனவர்கள் 4 பேர் அவர்களது வள்ளத்துடன் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள் ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி கடற்றொழிலுக்காக சென்று திரும்பிக்கொண்டிருந்த இவர்களிடம் நான்கு மெற்றிக் தொன் டூனா ரக மீன்களும் இருந்துள்ளன.

டூனா ரக மீன்கள் சர்வதேச சந்தையில் அதி கூடிய விலையில் விற்பனையாகும் மீன் வகையாகும். இதற்காக தென் பகுதி மீனவர்கள் இந்திய கடல் எல்லை ஊடாக அரபுக் கடலுக்கு செல்வது வழக்கம்.

மாத்தறையிலிருந்து கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி சென்ற ‘ரண்முத்து துவ’ என்ற படகையும் அதில் பயணம் செய்த 4 பேரையும் ஒடிசா பொலிஸாரிடம் இந்திய கரையோர பாதுகாப்பு கப்பலான வஜிரா ஒப்படைத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply