சிரியா மீது பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை: ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 3 ஆண்டு காலமாக கிளர்ச்சி நடந்து வருகிறது. அதிபர் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வருகிற உள்நாட்டு சண்டையில் ஒரு லட்சம் பேர் பலியாகி விட்டனர். இந்த நிலையில், அங்கு மனித நேய அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு வழிவிடப்படவேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இரு தரப்பினரும் இதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், சர்வதேச சட்டத்தை சிரியா மீறி வருவதால், அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 நாடுகளை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிக்கை அளித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply