குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலர் நாட்டை ஸ்திரமற்றதாக்கவும் முயற்சி : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 

குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளரென சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, வெற்றி கொண்ட சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் காட்டிக் கொடுக்கும் இந்த சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாமென தொழிற் சங்கத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார். மே தினத்தில் உழைக்கும் மக்களின் சக்தியை உலகுக்கு காண்பிப்பதற்கு ஒன்றுபடுமாறும் ஜனாதிபதி சகல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தினர். நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு அரசு மேற்கொள்ளும் வேலைத்திட்டங் களுக்குத் தோழிற்சங்கத் தலைவர்கள் அன்று போல் இன்றும் வழங்கும் ஒத்துழைப்புகளை நான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்து மக்களுக்காக அபிவிருத்தி திட்டங்களை முன்கொண்டு செல்ல சகலரும் ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இதன்போது தொழிற்சங்க தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில், அரச ஊழியர்களின் கெளரவத்தையும் அபிமானத்தையும் ஜனாதிபதியே பாதுகாத்துக் கொடுத்தார்.

கடந்த அரசாங்கத்தால் குறைவாக மதிக்கப்பட்ட அரச சேவையை மீண்டும் பலப்படுத்தி அரச சேவைக்காக பெரும் பணிகளை நிறைவேற்றிய அரச தலைவராக ஜனாதிபதி வரலாற்றில் இடம்பெறுவார் என்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர்கள் உடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன. டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன. பசில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னி ஆராச்சி, குமார வெல்கம, டலஸ் அழகப்பெரும, ரோஹித்த அபேகுணவர்த்தன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, நிதி அமைச்சின் செயலர் கலாநிதி பீ. பீ. ஜயசுந்தர உட்பட அமைச்சுக்களின் செயலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply