சிரியாவில் மீண்டும் ரசாயன குண்டு வீச்சு: 2 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர்அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மீது அதிபர் ஆசாத்தின் ராணு வம் ரசாயன குண்டு வீசி தாக்கியது. அதில் 650–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தது. அதையடுத்து தன்னிடம் உள்ள ரசாயன குண்டுகளை அழிக்க சிரியா ஒப்புக்கொண்டது. அதன்படி ஆயுதங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அதிபர் ஆசாத் இன்னும் தனது கொடூரத்தை நிறுத்தவில்லை. தனது ராணுவம் மூலம் மீண்டும் ரசாயன குண்டு தாக்குதலை நடத்தியுள்ளார். வடக்கு மாகாணமான இட்லிப் நகரம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதை மீட்க ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அங்கு 8 தடவை ராசயன குண்டு வீசப்பட்டுள்ளது. அதில் நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இட்லிப் அருகேயுள்ள தல்மென்ஸ் கிராமத்தில் ஹெலிகாப்டரில் இருந்து 2 பேரல் குளோரின் குண்டுகள் வீசப்பட்டன. அவை வெடித்தவுடன் கிராமம் முழுவதும் குளோரின் கியாஸ் பரவியது.

அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு 70–க்கும் மேற்பட்டோர் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மயங்கினர். உடனே அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மக்முத் ஹஷாஷ் (6), அவனது அக்காள் மர்யுமா (16), ஆகிய 2 பேர் பலியாகினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply