முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பலதரப்பிலிருந்தும் வரவேற்பு

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த அறிவிப்பை அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், மதத் தலைவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் வரவேற்றுள்ளனர். இதுவொரு நல்ல ஆரோக்கியமான சமிக்ஞை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார். அரசாங்கம் என்றுமே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்திலேயே நடந்து வருகிறது. இனிப் புதிதாக செய்வதற்கு எதுவுமில்லை. வடமாகாண சபை ஏற்படுத்தப்பட முன்னர் வடக்கில் அரசாங்கம் செய்துள்ள சேவைகள் குறித்து மக்களுக்கு நன்கு தெரியும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மக்கள் எதிர்நோக்கும் கஷ்ட நிலையை உணர்ந்து உண்மையாகவே சேவை செய்ய முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது என கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று இதனை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தம்மை இணைத்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் அல்லது ஆளுமை யுள்ள முதலமைச்சரிடம் கட்சியை ஒப்ப டைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண் டுமென மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதான அமைப்பாளர் அருண். தம்பிமுத்து தெரிவித்திருக்கிறார். அதேபோன்று முதலமைச்சர் ஒரு அரசியல் வாதி அல்லவெனவும், அவர் ஒரு சிறந்த மக்கள் சேவகன் என்பதை மீண்டுமொரு தடவை தமிழ் மக்களுக்கு உணர்த்தியிருப்ப தாக பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் தெரிவித்திருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply