இலங்கைக்கு முழுமையான ஆதரவை மாலைதீவு வழங்கும்
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு மாலைதீவு முழுமையான ஆதரவை வழங் கும் என அந்நாடு உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்றுக் காலை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் நுன்யா மாமூன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது கல்வி, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உட்பட இரு நாடுகளின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்து ரையாடப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இலங்கை வந்திருந்த போது அவருடன் துன்யா மாமூனும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply