இராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 57 பேர் பலி

இராக்கில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர் உள்பட 57 பேர் பலியாகியுள்ளனர்.இராக் நாடாளுமன்றத்துக்கு வரும் புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸôர் திங்கள்கிழமை தங்களது வாக்குகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பாக்தாத் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் அவர்கள் திங்கள்கிழமை வாக்களித்தனர். அப்போது தற்கொலைப் படை தீவிரவாதிகள் 11 பேர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள், போலீஸôர் உள்பட 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் இராக்கின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களில், மேலும் 15 பேர் உயிரிழந்தனர். அத்துடன் இந்த தாக்குதல்களில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல்களை சன்னி தீவிரவாத பிரிவினர் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply