இலங்கையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல் 3 பெண்கள் கைது

இலங்கையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கும், சுங்கதுறை அதிகாரிகளுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள், அவர்களது உடைமைகளை சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையில் இருந்து பெங்களூருக்கு வந்த விமான பயணிகளிடம் போலீசாரும், சுங்கதுறை அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 3 பெண்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று பெண் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த காலணி மற்றும் பையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 3 பெண்களையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

ரூ.35 லட்சம் தங்க கட்டிகள்

விசாரணையில், அவர்களது பெயர்கள் ஆயுப் பாத்திமா(வயது 43), இப்திகார் பாத்திமா(48), நாகூர் ஆத்மி பாத்திமா(44) என்பதும், இலங்கையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் பெங்களூர் வழியாக தமிழ்நாட்டிற்கு எளிதாக தங்க கட்டிகளை கடத்தலாம் என்ற நோக்கத்தில், இலங்கையில் இருந்து பெங்களூருக்கு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.35 லட்சம் தங்க கட்டிகளை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேர் மீதும் பெங்களூர் சர்வதேச விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply