காஷ்மீரில் கொல்லப்பட்ட தமிழர் மேஜர் முகுந்துக்கு மோடி மரியாதை
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் விக்ரம்சிங் ஆகியோருக்கு பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். 
இதுபற்றி அவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், ‘‘மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் விக்ரம்சிங் ஆகியோரின் தியாகத்தை இந்த நாடு எப்போதும் மறக்காது. அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களது துணிச்சலான நடவடிக்கையை படிக்கும்போது மனதை தொடுகிறது. நமது ராணுவத்தினர் மீது பெருமை கொள்ள வைக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply