சீனா ரெயில் நிலையத்தின் மீது தீவிரவதிகள் திடீர் தாக்குதல் : 3 பேர் பலி
சீனாவின் யுன்னான் மாகாணத்தின் குன்மிங் ரெயில் நிலையத்துக்குள் இரு கரங்களிலும் நீளமான வாட்களுடன் கடந்த மாதம் நுழைந்த ஒரு கும்பல் கண்ணில் தென்பட்ட நபர்களை எல்லாம் கொடூரமான முறையில் வெட்டி சாய்த்தது. பீதியுடன் அலறியடித்து ஓடியவர்களை விடாமல் விரட்டிச் சென்ற அந்த கும்பலின் கொலைவெறி தாகுதலுக்கு 33 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 143 பேர் படுகாயமடைந்தனர். க்சின்ஜியாங் மாகாணத்தை சீனாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் முஸ்லிம் தீவிரவாதிகள் இது போன்ற கோரத் தாக்குதலை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆவேசத்தை தணிக்கும் விதமாக அப்பகுதியில் 4 நாள் சுற்றுப் பயணம் சீன அதிபர் க்சி ஜின்பிங் க்சின்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கியில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், உரும்கி ரெயில் நிலையத்தின் உள்ளே இன்று நுழைந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். உயிர் பயத்தில் அலறியடித்து ஓடிய மக்களை வாசலில் நீண்ட வாள்களுடன் நின்றிருந்த தீவிரவாதிகள் மடக்கிப் பிடித்து கண்மூடித் தனமாக வெட்டித் தள்ளினர்.
இச்சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 79 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சீன அதிபர் க்சி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply