உழைக்கும் மக்களின் ஐக்கியத்தைக் காட்டும் உன்னத தினம்
உலகத்திலுள்ள அனைத்து தொழிலா ளர்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்ற இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சகல மக்கள் மத்தியில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் கட்டியெழுப்பப்பட்டுள்ள சந்தர்ப்பம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தருணத்தில் இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை காட்டும் ஒரு விசேட தினமாக இந்த மேதினத்தைக் குறிப்பிட முடியும்.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தொழிலாளர் வர்க்கத்தை தவறான வழிக்குத் திசைதிருப்பும் சூழ்ச்சிகளை தோல்வியடையச் செய்வதற்கு இத்தினத்தை நாம் வாய்ப்பாக்கிக் கொள்ளுவோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் இலங்கை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி கட்டியெழு ப்பப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் இரத்தம், வியர்வை ஆகியவற்றால் பெற்றுக்கொண்ட தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த மேதினத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply