5 ஆண்டுகளாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க ராணுவ வீரரை தாலிபான்கள் விடுவித்தனர்
5 ஆண்டுகளாக பிணையக் கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க ராணுவ வீரரை ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் நேற்று விடுவித்தனர். பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பாக்டிக்கா மாகானத்தில் இருந்து அமெரிக்க படையை சேர்ந்த சார்ஜண்ட் போவே பெர்க்டால்(28) என்பவரை தாலிபான்கள் கடந்த 2009-ம் ஆண்டு கடத்திச் சென்றனர். அமெரிக்காவின் குண்டனாமோ சித்ரவதை கூடத்தில் அடைபட்டிருக்கும் 5 தாலிபான்களை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்த அவர்கள், அமெரிக்க ராணுவ வீரரை பிணையக் கைதியாக அடைத்து வைத்திருந்தனர்.
அவரை விடுவிக்க ரகசியமாகவும், அதிகாரபூர்வமற்ற முறையிலும் பேரம் நடந்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அரசு ஐந்து தாலிபான்களை விடுதலை செய்ததாகவும், இதனையடுத்து, சார்ஜண்ட் போவே பெர்க்டால் நேற்று விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply