சிரியாவில் சுரங்கம் வெடி வைத்து தகர்ப்பு- 20 ராணுவ வீரர்கள் பலி

சிரியாவின் அலெப்போ நகரில் வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு சுரங்கத்தை கிளர்ச்சியாளர்கள் தகர்த்ததில் 20 ராணுவ வீரர்கள் பலியாகினனர். சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சி படை வசம் சில நகரங்கள் உள்ளன. அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பழைய அலெப்போ நகரின் ஸஹ்ராவி மார்க்கெட் அருகே உள்ள ஒரு சுரங்கத்தில் அரசுக்கு சொந்தமான வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த சுரங்கத்தை கிளர்ச்சியாளர்கள் தகர்த்ததில் 20 ராணுவ வீரர்கள் பலியானதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply