மலேசியாவில் தாய்லாந்து எண்ணெய் கப்பல் கடத்தல்?

சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இந்தோனேசியா நோக்கி தாய்லாந்து நாட்டு டீசல் எண்ணெய் கப்பல் ‘எம்.டி. ஆரபின்–4‘ சென்று கொண்டிருந்தது. கப்பலில் 14 சிப்பந்திகள் இருந்தனர். சிங்கப்பூர் முனையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றதை தொடர்ந்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து விட்டது. இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச கடல் முனையம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டது. அதில் இருந்த 3 மில்லியன் லிட்டர் டீசல் திருடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply