சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த முன்னாள் போராளி கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரான கண்ணமுத்து யோகரா (48 வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் போது வீரமணி என்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனேரிக் குளத்துமடுவைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் யானை வழங்கி எனும் வயல் பிரதேசத்தில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் இருப்பதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், இவருக்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தின் மூலம் பகிரங்க பிடியானை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த நிலையிலே இவர் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாழைச்சேனை பொலிஸ் நிலைய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply