வடக்கு அபிவிருத்தி முன்னெடுப்புக்கு உகண்டா அமைச்சர் பாராட்டு
வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித அபிவிருத்தி நடவடிக் கைகளை உகண்டாவின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் ஒகேல்லோ ஓர்யெம் பாராட்டியுள்ளார். வட மாகாணத்திற்கான நேரடி விஜயத்தை மேற்கொண்டிருந்த உகண்டா அமைச்சர் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
உகண்டாவின் சர்வதேச விவகாரங்க ளுக்கான அமைச்சர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளதுடன் அவர் வடக்கிற்கான பயணமொன்றையும் மேற்கொண்டிருந்தார்.,
ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குறுகிய காலத்தில் நீங்கள் ஈட்டிக்கொண்டுள்ள வெற்றி பிரமிக்கச் செய்கிறது. உகண்டா 20 வருட காலம் பயங்கரவாதப் பாதிப்புக்குட்பட்ட நாடு என்ற வகையில் அந்த சவால்களை எம்மால் புரிந்துகொள்ள முடியும்” என்றார்.
ஜனாதிபதி அவர்கள் உகண்டாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததையும் முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ இந்த வருடத்தில் ஜனவரியில் உகண்டாவுக்கு விஜயம் செய்ததையும் இதன் போது அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். தாம் ஆபிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் பயனுள்ளதாக அமைந்ததாக இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒத்துழைப்பினைப் பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சின் செயலாளர் §னூகா செனவிரத்ன, உகண்டாவுக்கான இலங்கை தூதுவர் வீ., கனநாதன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply