அனர்த்தங்களால் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு இறுதிக்கிரியைகளுக்கு நிதியுதவி
கடும் மழை, வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் பணிப்புரைகளை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் குடும்பங்களுக்கு உணவு, உடை மற்றும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விசேட பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.அத்துடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.
நேற்றுக்காலை இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பின ருக்கும் இது பற்றிய பணிப்புரையையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ள ஜனாதிபதி, இயற்கை அனர்த்தங்களினால் மரணமடைந்தவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்கான நிதியினைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தந்த பிரதேசங்களிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் நிலமைகளைப் பார்வையிட்டு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத் துள்ள ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு, உடை போன்றவற்றையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply