29 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு
தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களை அவர்களின் படகுகளுடனும் வலைகளுடனும் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.06 படகுகளில் வந்த மேற்படி 29 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்திருந்தனர்.
அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட திங்கட்கிழமை (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்தியாவின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் மேற்படி மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் கடற்படை மூலமமாக பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட் டிருந்தார்.
இந்நிலையில் இந்திய மீனவர்கள் 29 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply