தமிழக முதல்வர்  ஜெயலலிதாவுக்கு கெஹெலிய கண்டனம் 

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ‘இலங்கையின் இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பிரயோகித்தமைக்கு, இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்திருந்த ஜெயலலிதா ஜெயராம், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது, இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பிரேரணை ஒன்றை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் ஜனநாயக நாடுகளுக்கு இடையில் இவ்வாறு இனப்படுகொலை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றமை முற்றிலும் தவறானது என்று, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் தனிப் பெரும்பான்மையை மத்திய அரசாங்கம் அடைந்துள்ளமை, இலங்கைக்கு நன்மையை தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply