நைஜீரியாவில் ஒரே கிராமத்தை சேர்ந்த 45 பேர் பலி
நைஜீரியாவின் போகோ ஹராம் முஸ்லிம் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரே கிராமத்தை சேர்ந்த 45 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு திசையில் உள்ள மாய்டுகுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மக்கள் வழமையான ஒன்று கூடலில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை போகோ ஹராம் முஸ்லிம் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், இந்த வாரத்தில் மாத்திரம் 200க்கும் அதிகமான கிராமவாசிகள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply