யுக்ரேனின் புதிய அதிபர் பொரோஷென்கோ பதவியேற்றார்
யுக்ரேனின் புதிய அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ, தமது நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக உறுதியேற்றுள்ளார். கடந்த மார்ச்சில் ரஷ்யாவுடன் இணைந்த க்ரைமியா யுக்ரேனின் அங்கமாகவே எப்போதும் கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தலைநகர் கியேவில் நடந்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர் பேசிய பொரோஷென்கோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் யுக்ரேனுக்கு முழு உறுப்புரிமை பெறுவதற்காக அயராது உழைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
பெரும் செல்வந்தரான பெட்ரோ பொரோஷென்கோ, யுக்ரேனின் குழப்பநிலைமையை நிறுத்துவதற்கான தனது திட்டங்களையும் முன்வைத்துள்ளார். தனக்கு பழிவாங்கவோ மோதலில் ஈடுபடவோ எண்ணம் இல்லை என்றும் கூறிய யுக்ரேன் அதிபர், தமது கரங்களில் இரத்தக்கறை படியாதவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் அமைதித்திட்டத்தையும் முன்மொழிந்தார்.
கிழக்கு யுக்ரேன் மக்களுக்கு ரஷ்ய மொழி உரிமையை வழங்கவும் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை பகிரவும் தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply