இந்திய-வங்காளதேசம் எல்லை அருகே மோதல் இந்திய வீரர் படுகொலை

இந்தியா-வங்காள தேச எல்லை அருகே நடந்த மோதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். திரிபுரா மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், தெற்கு ராம்நகர் கிராமம் அருகே கடத்தல்காரர்களை துரத்திச் சென்றனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நின்ற கிராம மக்கள், பாதுகாப்பு படையினர் மீது உருட்டுக்கட்டை மற்றும் அரிவாளால் தாக்கினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்கினர். இந்த மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சந்தீப் குமார் என்ற வீரர் கொல்லப்பட்டார்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பொதுமக்கள் தரப்பில் இஸ்மாயில் மியா என்பவர் இறந்தார். 10 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு மேற்கு திரிபுரா மாவட்ட கலெக்டர் அபிஷேக் சிங் சென்று பார்வையிட்டார். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறிய அவர், தவறு செய்தவர்கள் ஒருவரும் தப்ப முடியாது என்று குறிப்பிட்டார்.

இதுஒருபுறமிருக்க, ஊர் மக்கள் வேறு விதமாக கூறியுள்ளனர். குளத்தின் அருகில் கிராமத்தினர் இருந்தபோது அங்கு ரோந்து வந்த பாதுகாப்பு படை வீரர்கள் தகராறு செய்ததாக மேற்கு அகர்தலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply