தமிழக மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அரசுடன் இந்திய தூதர் பேச்சு

ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான படகுகளில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களில் ஒரு பிரிவினர், தலைமன்னார் பகுதியிலும், மற்றொரு பிரிவினர் நெடுந்தீவு பகுதியிலும் பிடிபட்டதாக இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கோசல வாரனகுலசூரியா தெரிவித்தார். தலைமன்னாரில் பிடிபட்டவர்கள் அங்குள்ள மீன்வள ஆய்வு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும், நெடுந்தீவில் பிடிபட்டவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிடிபட்ட மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், பிடிபட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இத்தகவலை டெல்லியில், வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரவின்பேரில், இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply