கராச்சி விமான நிலையத்தில் தாக்குதல்: நான்கு பாதுகாப்பு படையினர் பலி
கராச்சி விமான நிலையத்தின் பழைய முனையத்திற்குள் எட்டு முதல் பத்து பேர் வரையிலான தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை போன்று போலியான அடையாள அட்டையை காண்பித்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு காவலில் இருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் நான்கு பேர் பலியானார்கள். மேலும் கையெறி குண்டுகளை கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதியை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு வரும் வழி அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு படையினரால் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு படையினர் கடுமையான சோதனைக்கு பின்னர் தான் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் அங்குள்ள ஜின்னா விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு வந்து சேரவேண்டிய விமானங்கள் வேறொரு விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து அறிந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பாதுகாப்பு படையினரிடம் பயணிகளை பத்திரமாக மீட்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply