ஊவா தமிழ் மக்கள் அரசுக்கு வாக்களிப்பதன் மூலமே தேவைகளை வெல்ல முடியும்
வெறும் உணர்ச்சி வசனங்களுக்கும் அரச விரோத அறிக்கைகளுக்கும் ஊவா மாகாண மக்கள் விலை போகாமல் அசைக்க முடியாத பலத்துடன் இருக்கும் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதன் மூலமாகவே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என மஹியங்கன தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இறுதி பிரசார கூட்டத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும் தனது உரையில் :-
ஊவா மாகாணத்தில் தமிழ் வாக்காளர் களில் நூற்றுக்கு 95 சதவீதமானவர்கள் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த மலைநாட்டு இந்திய வம்சாவளியினரே. உங்களது தேவை ஏனைய பிரதேசங்களை விட வித்தியாசமானது. யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்படா விட்டாலும் கூட யுத்த காலத்தில் தலைநகரத்துக்கோ பிற நகரத்திற்கோ வேலை நிமித்தம் செல்ல முடியாத கெடுபிடிகள் இருந்தன.
படித்த உங்கள் பிள்ளைகளை தலைநகரத்திற்கு அனுப்ப முடியாதிருந்தது. ஆனால். இன்று எமது ஜனாதிபதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததினால் மலையக தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் எங்கும் சென்று வேலை செய்யக்கூடியதாக உள்ளது.
யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தியில் மலையக மக்களுக்காக பாரிய நிதி ஒதுக்கப்பட்டு தோட்டங்களுக்கு நடந்து கூட செல்ல முடியாதிருந்த பாதைகள் இன்று கார்பட் இடப்பட்டு கொங்கிரீட் இடப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊவா மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. உயர்தர தமிழ் பாடசாலைகள் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்டு சிறப்பான கட்டடங்களுடன் சிறந்து விளக்குகின்றன.
இதன் மூலம், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தோட்டத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை மாறி சிறந்த கல்விமான்களாக விளங்கக் கூடியதாக உள்ளது. தோட்டங்களில் சிறிய வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டு சுகாதார சேவை வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எமது அரசாங்கத்தினாலேயே செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறான பலவித அபிவிருத்திகளை செய்வதற்கு எமது அரசாங்கத்திற்கு வாக்களிப்பதனால் மட்டுமே முடியும்.
அரசாங்கத்தை மாற்றுவதன் மூலமாக பெருந்தோட்டத் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அரசாங்கத்தை மாற்றவும் முடியாது. சார்ந்த மலைநாட்டு இந்திய வம்சாவளியினரே. உங்களது தேவை ஏனைய பிரதேசங்களை விட வித்தியாசமானது. யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்படா விட்டாலும் கூட யுத்த காலத்தில் தலைநகரத்துக்கோ பிற நகரத்திற்கோ வேலை நிமித்தம் செல்ல முடியாத கெடுபிடிகள் இருந்தன. படித்த உங்கள் பிள்ளைகளை தலைநகரத்திற்கு அனுப்ப முடியாதிருந்தது. ஆனால். இன்று எமது ஜனாதிபதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததினால் மலையக தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் எங்கும் சென்று வேலை செய்யக்கூடியதாக உள்ளது.
யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தியில் மலையக மக்களுக்காக பாரிய நிதி ஒதுக்கப்பட்டு தோட்டங்களுக்கு நடந்து கூட செல்ல முடியாதிருந்த பாதைகள் இன்று கார்பட் இடப்பட்டு கொங்கிரீட் இடப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊவா மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. உயர்தர தமிழ் பாடசாலைகள் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்டு சிறப்பான கட்டடங்களுடன் சிறந்து விளக்குகின்றன.
இதன் மூலம், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தோட்டத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை மாறி சிறந்த கல்விமான்களாக விளங்கக் கூடியதாக உள்ளது. தோட்டங்களில் சிறிய வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டு சுகாதார சேவை வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எமது அரசாங்கத்தி னாலேயே செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறான பலவித அபிவிருத்திகளை செய்வதற்கு எமது அரசாங்கத்திற்கு வாக்களிப்பதனால் மட்டுமே முடியும். அரசாங்கத்தை மாற்றுவதன் மூலமாக பெருந்தோட்டத் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அரசாங்கத்தை மாற்றவும் முடியாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply