ஐரோப்பிய யூனியன் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் புலிகள் தலைதூக்க இடமளியோம் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஐரோப்பிய யூனியன் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் அரசாங்கமும் படையினரும் புலிகள் மீள தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இருண்ட யுகமொன்றிலிருந்து நாட்டை மீட்டு அமைதியிலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி முன்னேற்றுகையில் சர்வதேச அழுத்தங்கள் தொடர்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஐரோப்பிய நாடுகளில் புலிகளில் சுதந்திரமாக செயற்படும் வகையில் வழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் எமது அரசாங்கமும் படையினரும் புலிகள் மீள தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவெல பிரதேச சபைக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த வைபவத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதைத் தெரிவித்தார்.
அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி,
கோமரங்கடவல பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்து மக்கள் சேவைக்காக அதனைக் கையளிப்பதில் மகிழ்ச்சியடை கின்றேன்.
இற்றைக்கு நான்கு வருட ங்களுக்கு முன்பு இப்பிரதேசத்தின் நிலைமையை நான் புதிதாகக் கூறத் தேவையில்லை. 2009 ற்கு முன் இருளடைந்த யுகமொன்றே நாட்டில் இருந்தது. இப்பகுதியில் பயங்கரவாதிகள் பல முறை தாக்குதல்களை மேற் கொண்டி ருந்தனர்.
தற்போது நிலைமை முழுமையாக மாறியுள்ளது. எங்கும் எவரும் பயம் சந்தேகமின்றி பயணிக்கக்கூடிய வாழக்கூடிய சூழல் நாட்டில் தற்போது உருவாக்கப் பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி இப்பிரதேசத்திற்கு இது போன்ற இரவு வேளையிலும் வந்துபோக முடிகின்றது.
இந்த நிலைமையை உணர்ந்தோ அல்லது உணராதோ சிலர் குறுகிய அரசியல் இலாபத்திற்காக செயற்படுகின்றனர். கடந்த கால மோசமான நிலைமையை அறியாதவர்களாகவே அவர்கள் செயற்படுகின்றனர் என எம்மால் கருத முடிகிறது.
புலிகளுக்கான தடை உலக நாடுகள் எங்கும் விதிக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவர். எனினும் அண்மையில் ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இத்தடையை நீக்கி புலிகள் மீள சுதந்திரமாக அந்நாடுகளில் செயற் வழிவகுத்துள்ள னர்.அத்தோடு இலங்கையிலிருந்து மீன் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன. இச்செயற்பாடுகள் ஏதாவது காரணத்தோடுதான் மேற் கொள்ளப்பட்டது. எனினும் என்ன காரணம் என்று எமக்குப் புரியாமலுள்ளது. நீதிமன்ற விடயம் என்பதால் அது தொடர்பில் நாம் கருத்துக்கூற முடியாது.
எவ்வாறாயினும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க எமது படையினரும் அரசாங்கமும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
நாட்டில் எங்கும் இப்போது பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. மின்சாரம், பாதைகள், பாடசாலைகள் என பல திட்டங்கள் எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராமங்கள் மாற்றம் கண்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தமது பிள்ளைகளின் கல்வியிலும் முன்னேற்றத்திலும் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். தங்கள் பிள்ளைகள் இந்த நாட்டை மட்டுமின்றி உலகை வெற்றி கொள்பவர்களாக உருவாக்க வேண்டும். பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு வேறு விடயங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டாம்.
பிள்ளைகளை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரினதும் தலையாய கடமை.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் நாம் வயது முதிர்ந்தோர், வலது குறைந்தோர் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுத் துள்ளோம். இந்த வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதும் மக்கள் அதன் பலன்களை அனுபவிக்க முடியும்.
நகரங்களை போன்றே கிராமங்களையும் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம். கொழும்பிலிருந்து மூன்றறை மணித்தியாலங்களில் திருகோணமலைக்கு வர முடிகிறது.
கிராமிய மக்களுக்கான வசதிகள் இவ்வாறு பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. நான் கிராமத்தில் பிறந்தவன். கிராம மக்களின் உணர்வுகள் தேவைகளை அறிந்தவன் என்ற வகையில் கொழும்பு நகரில் வாழ்பவர்கள் போலன்றி நான் கிராம மக்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுகின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply