லண்டனில் ஜாம்பியா நாட்டு அதிபர் மைக்கேல் சட்டா மரணம்

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் மைக்கேல் சட்டா அதிபராக பதவி வகித்து வந்தார். 77 வயதான இவர் கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 19-ந் தேதி தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு சென்ற அவர், அங்கு கிங் எட்வர்ட் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் மாலையில் மரணம் அடைந்ததாக ஜாம்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இதை மந்திரிசபை செயலாளர் ரோலண்ட் சிஸ்கா உறுதி செய்தார்.

அதே நேரத்தில் மைக்கேல் சட்டா, எந்த நோயால் உயிரிழந்தார் என்பது குறித்து தெரிவிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துவிட்டது.

மைக்கேல் சட்டா கடந்த ஜூன் மாதத்திலிருந்து பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்தார். இதற்கான காரணம் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக இஸ்ரேலுக்கு சென்றிருப்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் கடந்த மாதம் ஐ.நா. சபையில் உரையாற்ற நியூயார்க் சென்றிருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்காமல் ஓட்டலிலேயே தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply