பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுங்கள் : ஆறுமுகன் தொண்டமான்
பதுளை கொஸ்லந்தை, ஹல்துமுல்ல, மீயாபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் இ.தொ.கா. சார்பில் அதன் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து ள்ளார். இதுவரையிலும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தொண்டர் நிறுவனங்கள், சமூகநல அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், ஆகியவற்றின் ஊடாக வழங்கப்பட்ட நிவாரணங்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் தொண்டமான், கிடைக்கப்பட்ட பொருட்கள் தற்பொழுது அவர்களுக்கு போதுமான நிலையில் இருக்கின்ற காரணத்தினாலும். இயல்புநிலை வழமைக்கு திரும்பிய பின்பு எவ்வாறான உதவிகள் தேவை என்பதை அறிந்து, அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உதவிகள் வழங்க உதவும் கரங்கள் முன்வர வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களது விபரப்பட்டியல் திரட்டப்பட்டு வருகின்றது. எமது உறவுகள் பாதிக்கப்படும் போது விரைந்து உதவிக்கரம் நீட்டுவது எம் அனைவரினதும் கடமையாகும்.
ஆகவே. உதவிகள் வழங்க முன்வருவோர் நேரடியாக தம் பொருட்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு வழங்க முடியும். இதற்கு முகவர் தேவையில்லை.
இன்னொரு முக்கிய விடயம், கொஸ்லந்தை சம்பவத்தை வைத்து வியாபார நோக்கோடு, நிவாரணம் சேகரிக்கும் குழுவினர் இயங்குவதையிட்டு மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply