மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதா? விசேட பொலிஸ் குழு நியமனம்
கொஸ்லந்த மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் விசேட பொலிஸ் குழு ஒரு வாரத்துக்குள் தனது விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அரசாங்க அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனரா? அவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அது தொடர்பில் தோட்ட நிர்வாகிகள் அசிரத்தையுடன் செயற்பட்டுள்ளனரா? என்ற கோணத்தில் இந்தக் குழு விசாரணையை நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவிய லாளர் சந்திப்பிலேயே பொலிஸ் பேச்சா ளர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
மண்சரிவு அபாயம் ஏற்பட்ட பகுதிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், மண்சரிவு குறித்தும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் குறித்தும் விசாரணைகளை நடத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய குறித்த பகுதியில் ஏற்கனவே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததா அவ்வாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்துவதற்கு சப்ரகமுவ, ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங் கவின் கண்காணிப்பின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கொட்டாச்சி தலைமையில் விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 5 நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இது மட்டுமன்றி மண்சரிவால் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒரு குழுவும், இச்சம்பவத்தில் ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் குறித்த விசாரணை களை மேற்கொள்வதற்கும் இருவேறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் இதுவரை உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 34 பேர் காணாமல் போயிருப்பதாக அவர்களின் உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள், அம்மிட்டிகந்த பிரதேச செயலாளர், கொட்டபத்ம கிராமசேவகர், குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்திய தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் புவிச்சரிதவியலாளர் மகேஷ் பண்டார சோமரட்ன, அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்துக்கள் பதிவுசெய்யப்பட் டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
நஷ்டஈடுகள் மற்றும் உயிரிழந்தவர்க ளுக்கான மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுப்பதாயின் பொலிஸ் அறிக்கை அவசியம் என்பதால் இரண்டு பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை நடத்தி வருகின்றன. இந்த நடவடிக்கை களுக்காக 400 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply