இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் : சுப்பிரமணியம் சுவாமி
இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என இந்திய பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றால் இலங்கை தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கனவை நனவாக்க தான் உதவிபுரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டரில் சுப்பிரமணிய சுவாமி குறிப்பிட்டுள்ள இவ்விடயத்துக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தாமும் உதவி புரிவதாகவும் மரண தண்டனை பெற்ற தமிப்ழ மீனவர்கள் 4 பேரையும் விடுவித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply