மத்திய கிழக்கிலுள்ள இலங்கையரும் வாக்களிக்க விசேட திட்டம் அவசியம்
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்களை வாக்களிக்கச் செய்யும் முறையான திட்ட மொன்று அரசியலமைப்பிற்கிணங்க நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில் தேர்தல் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், அரசியலமைப்பிற்கிணங்க முறையான வேலைத் திட்டமொன்று இதற்கு அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் முறையாக வாக்களிப்பது தொடர்பில் நாம் கட்சிகளினதும் சிவில் அமைப்பு களினதும் ஆலோசனைகளைக் கோரியிருந் தோம். எவரிடமிருந்தும் பதில் வரவில்லை. அரசியலமைப்பின் மூலம் இதற்கொரு முறையான திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சவூதி போன்ற நாடுகளில் இலட்சக் கணக்கான இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வாழ்கின்றனர். அவர்களில் மிகச் சிலரே தலைநகரில் வாழ்கின்றனர். ஏனையோர் கிராமப் புறங்களிலேயே வாழ்கின்றனர்.
எமது வாக்களிப்பு நடைபெறும் தினத்தில் அவர்களை தலைநகருக்கு வந்து வாக்களிப்பதற்கு அனுமதிப்பதில்லை. அதற்கான ஏற்பாடுகளும் அங்கில்லை. இவர்கள் வாக்களிக்கும் சந்தர்ப்பம் இல்லாமற் போகிறது. இதற்கொரு முறையான வேலைத்திட்டம் அவசி யமாகிறது. வெளிநாடுகளிலுள்ளோர் ‘இன்டர் நெட்’ மூலம் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பது சிலரது கருத்து. எனினும் சாதாரண வாக்களிப்பின் போதே இங்கு “பெட்டி மாற்றுவதாக” வதந்திகளை கிளப்புபவர்கள் இணையத்தின் மூலம் வாக்களிப்பதை எவ்வாறு விமர்சிப்பர் என்பதை நான் கூறவேண்டியதில்லை. எனவே நடைமுறையிலுள்ள அரசிய லமைப் பிற்கிணங்க இதற்கென விசேட வேலைத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply