பிலிப் ஹியூக்ஸ் மரணம் கிரிக்கெட்டின் கருப்பு நாள்

ஆஸ்திரேலிய இளம் வீரர் பிலிப் ஹியூக்ஸ் கிரிக்கெட் வீரர்கள் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- தெண்டுல்கர் (இந்தியா): ஹியூக்ஸ் மரணம் செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இது கிரிக்கெட்டுக்கு கருப்பு நாள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியினர்: ஹியூக்ஸ் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்கும் உலக கிரிக்கெட் சமுதாயத்துடன் ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் நாங்களும் இணைந்து கொள்கிறோம். அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை இறைவன் அவரது குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

டோனி அப்போட் (ஆஸ்திரேலிய பிரதமர்): ஹியூக்ஸ் மரணம் கிரிக்கெட்டுக்கு மிகவும் மோசமான நாள். அவர் சக அணி வீரர்களாலும், ரசிகர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டவர்.

டேரன் லீமான் (ஆஸ்திரேலிய பயிற்சியாளர்): ஹியூக்ஸ் நீ ஒரு குட்டி சாம்பியன். நாங்கள் எல்லாம் உன்னை தவற விடுகிறோம்.

ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்): இல்லை. இல்லவே இல்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை.

டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா): எங்களது இதயமே நொறுங்கி போய் விட்டது. இது ஒரு கருப்பு தினம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply