ஜெயலலிதா சமரச மனுவை ஏற்றது வருமான வரித்துறை: 18 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வருகிறது
வருமான வரி வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சமரச மனுவை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து 18 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வர உள்ளது. வருமான வரி செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில், அபராதத் தொகையுடன் சேர்த்து வருமான வரியை கட்ட உள்ளதாக ஜெயலலிதா சார்பில் மத்திய வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத்திடம் சமரசம் கோரப்பட்டது. இது தொடர்பான ஆலோசனைக்குப் பிறகு, ஜெயலலிதாவின் இந்த சமரத்தை மேல்முறையீட்டு ஆணையம் ஏற்றுக்கொண்டது. அவர் செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் அபராதத் தொகையை சென்னையில் உள்ள வருமான வரித்துறை முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டது. வருமான வரித்துறை கூறிய அபராதத்தொகையை ஜெயலலிதா கட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயலலிதா மீதான 18 ஆண்டுகால வருமான வரி வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா கடந்த 1992௯3, 1993௯4 ஆண்டுகளில் வருமான வரி செலுத்தவில்லை என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரும்போது, வழக்கு முடித்து வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply