முதலாளித்துவ பொருளாதார பாதையை நோக்கி செல்லும் மோடியின் அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தி.மு.க. பொருளாளரும், தமிழக முன்னாள் துணை முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மோடியின் அரசு கலப்பு பொருளாதாரத்தில் இருந்து முதலாளித்துவ பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து கடந்த ஆறு மாதங்களில் மோடி ஏராளமாக பேசி இருக்கிறார். நிறைய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். ஏழைகளுக்கு பிச்சையும், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு அனைத்து வகையான வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகளை நாம் காண முடிகின்றது.
மோடியின் அரசு கலப்பு பொருளாதாரப்பாதையை விட்டு முதலாளித்துவ பொருளாதார பாதையை நோக்கி செல்வதாகவே தெரிகின்றது. மேலும், ஆர்.எஸ்.எஸ்.-ன் அடையாளங்களான ‘இந்து ராஷ்ட்டிரம் மற்றும் சமஸ்கிருதம்’ போன்றவை மீண்டும் தலைகாட்ட தொடங்கி விட்டன என ஸ்டாலின் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply