குஷ்பு பற்றி விமர்சனம்: தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்

புதுவை மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காங்கிரசில் இணைந்துள்ள குஷ்புவிற்கு காங்கிரஸ் வரலாறே தெரியாது என்றும், காங்கிரஸ் வரலாறை முழுமையாக அறியாதவர் என்றும் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி நடிகை ஸ்மிருதி ராணியை மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை மந்திரியாக பதவியில் அமர்த்தியுள்ளது. அவருக்கு தெரிந்த வரலாறு, அரசியல் ஆகியவற்றை விட குஷ்புவிற்கு அதிகமாகவே காங்கிரஸ் வரலாறு தெரியும். ஸ்மிருதி ராணியை விட தேச நலனில் அதிக அக்கறை கொண்டவர் குஷ்பு.முதலில் காங்கிரசில் குஷ்பு இணைந்திருக்கிற தருணத்தை பார்க்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள இந்த தருணத்தில் மிக துணிச்சலாக மதசார்பின்மையை பாதுகாக்க தேச நலனை கருத்தில் கொண்டு கட்சியில் இணைந்துள்ளார். அதிகார பதவிக்கான ஆசையால் அல்ல.

தமிழிசை சவுந்தர்ராஜன் பாரதீய ஜனதாவில் சேரும் போது அவருக்கு என்ன வரலாறு தெரியும். காந்தியவாதியின் மகளாக பிறந்து காங்கிரஸ் வரலாறு தெரிந்து கொண்டு பின்பு காந்தியவாதத்திற்கு நேர் எதிரான வாதத்தை உயர்த்தி பிடிக்கக்கூடிய வகுப்புவாத கட்சியில் ஐக்கியமாகி இருப்பது சுயநல அரசியல் லாபத்திற்கு தானே?

தமிழிசை ஒரு பெண் என்ற அடிப்படையில், அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முன் வருகின்ற மற்றொரு பெண்ணை பாராட்டவில்லை என்றாலும் ஆணாதிக்க பொறாமை மனப்பான்மையோடு குறைத்து விமர்சனம் செய்யக்கூடாது – அது தவறு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply