ஜனாதிபதி தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் இறுத்தினம் இன்று

ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல்கள்  செயலகத்தின் மேலதிக தேர்லகள்  ஆணையாளர் எம்.எம். முஹம்மட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 16 அரசியல் கட்சிகளும் 02 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இத் தேர்தலை முன்னிட்டு சகல மாவட்ட உதவி தேர்தல் அலுவலகங்களிலும் தேர்தலுக்கான சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கட்சியொன்றின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் 50 000 ரூபாவும் ஏனைய வேட்பாளர்கள் 75  000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply