கடல்சீற்றம் காரணமாக யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
கடல் சீற்றம் காரணமாக இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய நாகை மாவட்ட மீனவர்கள் இருவரும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் இன்று நாடு திரும்பினர். வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காளிதாஸ் (வயது38). காளியப்பன் (30). கடலூரை சேர்ந்தவர் ஜோதிமதி (40) ஆகிய 3 பேரும் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 26–ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர்.நவம்பர் 27-ந் தேதியன்று கரை திரும்பவேண்டிய அவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் கிராம பஞ்சாயத்தார் மூலம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மற்றும் கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக திசைமாறி சென்ற மீனவர்கள் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே உள்ள சுருளிபுரம் கடற்கரையில் கரை சேர்ந்ததாகவும், அவர்களை இலங்கை போலீசார் கைது செய்ததாகவும் தகவல் கிடைத்தது. பின்னர் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீனவர்களின் உறவினர்கள் அவர்களை மீட்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மூன்று மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் விளைவாக மூவரும் விடுவிக்கப்பட்டு இன்று காலை அவர்கள் நாடு திரும்பியதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply