மைத்திரி, ரணில், சம்பிக்க உள்ளிட்ட குழுவினர் கோயில், தேவாலயங்களுக்கு விஜயம்
ஜனாதிபதி தேர்தலுக்கு நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா மற்றும் ஹெல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் இன்று காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு ஸ்ரீ தலதா மாளிகை, மல்வத்த பீடம் மற்றும் கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கிறிஸ்தவ தேவாலயம் ஆகிய சமய ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றனர்.மேற்படி குழுவில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமத்துக் குழுவின் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, எம்.கே.டீ.எஸ்.குனவர்தன, சுஜீவ சேனசிங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
குறித்த குழுவினர், கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின் மல்வத்த பீடத்தின் மஹாநாயக்கர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து நல்லாசி பெற்றனர். அதன் பின்னர் இடம்பெற்ற இவர்களது கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்;கப்படவில்லை.
அதனை அடுத்து கட்டுகலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு சென்ற இக் குழுவினரை, ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் ஜீ. கிருஷ்ணமூர்த்தி, அறங்காவலர் சபை அங்கத்தவர் மோகன் நாகலிங்கம், உற்பட பலர் அங்கு வரவேற்றனர்.
அங்கு விஷேட பூஜை ஒன்று இடம்பெற்றதுடன் பிரமுகர்கள் பொன் ஆடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அதனையடுத்து அவர்கள் கெட்டம்பே கிறிஸ்தவ தேவாலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply