இஸ்ரேலில் ஓடும் பேருந்தில் 10 பயணிகளுக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது
இஸ்ரேலில் உள்ள முக்கிய நகரமான டெல் அவிவில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 10 பேரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். டெல் அவிவ் நகரில் உள்ள மாரிவ் பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயணிகளை கத்தியால் குத்திய பாலஸ்தீன நாட்டை சேர்ந்த நபரின் காலில் துப்பாக்கியால் சுட்ட இஸ்ரேல் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தை தீவிரவாதிகளின் தாக்குதல் என்றே கருதுவதாக போலீசார் கூறியுள்ளனர். 10 பேரை கத்தியால் குத்தியவுடன் பேருந்திலிருந்து குதித்து தப்பிக்க முயன்ற போது துப்பாக்கியால் சுட நேர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.கத்திக்குத்து காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், நான்கு பேர் பலத்த காயங்களுடனும், மூன்று பேர் சிறிய அளவிலான காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளனர். மேற்கொண்டு தாக்குதல் எதுவும் நிகழாத வண்ணம் குறிப்பிட்ட அந்த பகுதி முழுவதும் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply