இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 92 ரக பெற்றோல் 117 ரூபாவாகவும் (33 ரூபா விலை குறைப்பு), 95 ரக பெற்றோல் 128 ரூபாவாகவும் (30 ரூபா விலை குறைப்பு), சாதாரண டீசல் 1 லிட்டர் 95 ரூபாவாகும் (16 ரூபா விலை குறைப்பு), சுப்பர் டீசல் 110 ரூபாவாகவும் (23 ரூபா விலை குறைப்பு), மண்ணெண்ணெய் விலை 65 ரூபாவாகவும் (16 ரூபா ரூபா விலை குறைப்பு) குறைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply