பிரதமர் நரேந்திர மோடி – அதிபர் ஒபாமா இணைந்து நாட்டு மக்களுக்கு வனொலியில் உரை

இந்தியாவுக்கு வருகை தர உள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்ற உள்ளார். ஒபாமாவின் இந்தியப் பயணத் திட்டம் குறித்து அமெரிக்காவில் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மூன்று நாள் பயணமாக அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு ஜனவரி 25ம் தேதி வருகை தர உள்ளார். 26ம் தேதி புது தில்லியில் நடைபெறும் இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.

27ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து அதிபர் ஒபாமா அகில இந்திய வானொலியில், மனதின் பேச்சு (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply