உலக கோப்பை சூதாட்டம்: கலெக்சன் ஏஜெண்ட் உட்பட 8 பேர் கைது, 14.42 லட்சம் பறிமுதல்

உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னரே ஷேக் முகமது கவுஸ் என்ற மெயின் ’புக்கி’ தனது 2 மகன்களை வைத்து கிரிக்கெட் போட்டிகளின் போது ஆன்லைன் பெட்டிங்கில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்த நிலையில், சிறப்பு நடவடிக்கைக் குழுவின் அதிரடி நடவடிக்கையால் நேற்று தெலுங்கானா மாநிலத்தின் சைபராபாத்தில் கலெக்சன் ஏஜெண்ட் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 14.42 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தங்களுக்கு கிடைத்த தகவலின் படி, சைபராபாத்தில் உள்ள அப்பிக் காலனியில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்ட சைபராபாத் போலீசார், காலனியில் உள்ள பிளாட் ஒன்றில் பெட்டிங்கில் ஈடுபட்டிருந்த முகமது அலி மற்றும் சவுகத் அலி என்ற இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஆன்லைன் பெட்டிங்கில் ஈடுபடுவதற்காக வைத்திருந்த லேப்டாப், செல்போன், கத்திகள், ஏர்-கன் மற்றும் 12.82 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களுடன் இருந்த 3 கலெக்சன் ஏஜெண்ட் மற்றும் 3 சூதாட்டக்காரர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

என்ஜினியரிங் மாணவர்கள், தொழிலதிபர்கள், சிறு வணிகர்கள் என்று பலர் அவர்களிடம் ’பெட்’  கட்டி ஏமாந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply