பனிமூட்டம் காரணமாக அமெரிக்காவில் விமான விபத்து : 7 பேர் பலி

இண்டியானாபோலீசில் இருந்து புறப்பட்ட செஸ்னா 414 என்ற விமானத்தில் பணியாளர்கள் மற்றும் பயணிகள் என்று 7 பேர் பயணித்தனர். பத்துபேரை மட்டும் ஏற்றிச் செல்லக்கூடிய இந்த விமானத்தில் இரண்டு எஞ்சின்கள் உள்ளன. புறப்பட்ட சிறிது நேரத்தில் 160 கிலோ மீட்டர் தொலைவில் பறந்த விமானத்திலிருந்து திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மத்திய இல்லினாய்ஸ் விமான நிலையத்திற்கு வந்து சேரவேண்டிய விமானம் திடீரெனக் காணாமல் போனதையடுத்து, விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதற்கிடையே, செஸ்னா விமானம் மெக் லீன் கன்ட்டி அருகே விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply