தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதற்குப் போதுமான உதவியை அளிக்குமாறு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு கென்யா வேண்டுகோள் விடுத்துள்ளது

மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே ஆப்பிரிக்க நாடுகளும் தீவிரவாத தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நைஜீரியாவில் செயல்படும் போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தனி அமைப்பாக மாறிய அல் சபாப் தீவிரவாதிகள் சோமாலியாவை மையமாக வைத்து ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு  தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதல்களைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் சோமாலியாவுக்கு உதவி வருகின்றன. உதவி அளிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று என்பதால் அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அல் சபாப் தீவிரவாதிகள் கென்யாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 2013 ஆம் ஆண்டு தலைநகர் கெய்ரோவில் வெஸ்கேட் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 70 க்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகும் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் காரிசான் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 2 ஆம் தேதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கென்யாவில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. எனவே, தாக்குதல்களை எதிர்கொள்வதில் அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கென்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply