அரசாங்கத்துக்கு நிதிப்பற்றாக்குறை இல்லை மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளே தடுக்கப்பட்டுள்ளன : ரவி ரவிகருணாநாயக்க
அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு எதுவித நிதிப்பற்றாக்குறையும் இல்லையென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சரவை அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 400 மில்லியன் ரூபா தொடர்பான திறைசேரி உண்டியல்களுக்கான வரையறைகளை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டி ருந்தார்.
குறித்த பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாகவும் இதற்கு எதிராக வாக்கெடுப்புக் கோரப்போவதில்லை எனவும் எதிர்க் கட்சித் தலைவர் வழங்கிய உறுதி மொழியை நாம் நம்பினோம். இதனால் தான்பாராளுமன்றத்தில் இறுதிவரை இருக்காது அபிவிருத்தி தொடர்பான முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் தலைமையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நடைபெறுவது வழமை. இதில் கலந்து கொள்ளவே நாம் சென்றோம். பாராளுமன்றத்தை விட்டு நாம் தப்பிச் சென்றதாக அர்த்தம் கற்பிக்கக்கூடாது. அரச ஊழியர் களுக்கான கொடுப்பன வுகளை வழங்க அரசிடம் போதியளவு பணம் உள்ளது.
கடந்த அரசால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கவும், சமுர்த்திக் கொடுப்பனவை அதிகரிக்கவுமே நாம் பாராளுமன்றத்தில் இப்பிரேரணையை முன்வைத்திருந்தோம். இதனைத் தோற் கடித்ததன் மூலம் மக்களுக்குச் சென்றடையும் உதவிகள் தடுக்கப்பட்டுள்ளன. எம்மை பழிவாங் குவதாக நினைத்து மக்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகள் தடுக்கப்பட்டி ருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply