ஆப்கான் மற்றும் அமெரிக்க ராணுவ நட்பில் விரிசல்

நேசப்படையாக செயல்பட்டுவந்த ஆப்கான் ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவம் இடையே தற்போது மனக் கசப்புகள் அதிகமாகி மோதல் முற்றிவருகிறது. தனக்கு பயிற்சி அளித்த  அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை ஆப்கான் வீரர் சுட்டுக்கொன்றது   இரு நாட்டு பாதுகாப்புதுறை நட்பில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த அடிப்படைவாதிகளின் ஆட்சியை அகற்றி மக்களாட்சியை நிறுவுவதற்காக அங்கு நேட்டோ படைகள் பணியமர்த்தப்பட்டன.

தேர்தல் நடத்தப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்ட நிலையில், நேட்டோ படையினர் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்கப் படைகளின் ஒரு பிரிவினர் மட்டும் மேலும் சில காலம் அங்கேயே தங்கி அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நேட்டோ படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகள் தொடங்கப்பட்டதையடுத்து, தீவிரவாத தாக்குதல்கள் மீண்டும் தலையெடுத்தன. இருப்பினும், அயல்நாட்டுப் படைகளை முழுமையாக வெளியேற்ற ஆஃகன் ராணுவத்தினர் விரும்பினர். அதனால், பன்னாட்டு ராணுவத்தினர் மீது அவ்வப்போது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஜலாலாபாத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் மீது ஆஃப்கானிஸ்தான் வீரர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்க ராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் ஆஃகானிஸ்தான் ராணுவ வீரரும் உயிரிழந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply