இந்தியர்களை மீட்ட பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி
உள்நாட்டு கலவரம் நடைபெற்று வரும் யேமனில் இருந்து 11 இந்தியர்களை பாகிஸ்தான் படைகள் மீட்டதற்காக, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக, தமது டுவிட்டடர் இணையத்தள பக்கத்தில் கருத்து தெரிலித்துள்ள பிரதமர் மோடி பாகிஸ்தானின் உதவியுடன் ஏமனில் இருந்து திரும்பிய 11 இந்தியர்களையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் இந்த மனிதாபிமான நடவடிக்கைக்காக, பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மனிதநேய சேவை, எல்லைகளை அறியாது என்று கூறியுள்ள பிரதமர் மோடி ஏமனில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மியான்மர், நேபாளம் ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்க இந்தியாவும் உதவியதையுட் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply