ஏமன் உள்நாட்டு போர்: சவுதி விமானங்களுக்கு ஆகாயத்தில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்கா

ஏமன் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் சவுதி தலைமையிலான நாடுகளின் விமானங்களுக்கு ஆகாயத்தில் எரிபொருள் நிரப்ப ஆரம்பித்து உள்ளது அமெரிக்கா. ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19–ந்தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. இதில் கிளர்ச்சி படைகள் மீது தொடர்ச்சியாக குண்டு விசி தாக்குதல் நடத்திவரும் விமானங்களுக்கு செவ்வாய் கிழமை முதல் வானிலேயே எரிபொருள் நிரப்பப்படுகிறது.அமெரிக்காவின் கே௧35 ஸ்டார்டோ டேங்கர் என்ற விமானம் சவுதியின் எப்௧5 மற்றும் எப்௧6 என்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்திற்கும் வானிலேயே எரிபொருள் நிரப்பியதாக சவுதியின் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் இந்த போரில் அமெரிக்காவின் பங்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. மேலும் 12 பேரை கொண்ட அமெரிக்க ராணுவ குழு ஒன்று, 2 தளபதிகள் தலைமையில், சவுதி அரேபியாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக ரியாத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே தொழில்நுட்ப மற்றும் புலனாய்வு உதவிகளை செய்யும்படி ஒபாமா உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply