சிரியாவில் முதல் முறையாக கனடா விமானம் குண்டுவீச்சு

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்க கூட்டுப் படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் ஈராக் படைகள் மற்றும் குர்தீஸ் படைகளுக்கு ஆதரவாக இந்த குண்டு வீச்சுகள் நடக்கிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் அவர்களின் அணிவகுப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடக்கிறது.அமெரிக்கா கூட்டுப்படையில் கனடாவும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதுவரை கனடா தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. நேற்று முதல் முறையாக 2 போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ராக்கா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்தது. முக்கிய இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடந்ததாகவும் இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிநவீன 2–சி.எப்.18– எஸ். வகை விமானங்களை கொண்டு இந்த தாக்குதல் நடந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply