சிங்கப்பூரில் குடும்பத்தகராறில் பெண் கொலை: பிணத்தை ஆற்றில் வீசிய இந்தியருக்கு 30 மாதம் ஜெயில்

சிங்கப்பூரில் வசிப்பவர் குர்சரண் சிங் (வயது 27). இந்தியர். இவரது நண்பர் ஹர்விந்தர் (35). இவரும் இந்தியர். இவரது மனைவி ஜஸ்விந்தர்கவுர் (33). கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி ஹர்விந்தருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் மனைவியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஜஸ்விந்தர்கவுர் இறந்தார். இந்த கொலை சம்பவத்தை மறைக்க நினைத்த ஹர்விந்தர், பிணத்தை ஒரு பெரிய கருப்பு நிற பையில் அடைத்தார். பின்னர், பிணம் இருந்த பையை குர்சரண்சிங் உதவியுடன் சிங்கப்பூரில் உள்ள வாம்கோ ஆற்றில் வீசி எறிந்தார். பின்னர் ஹர்விந்தர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த கொலை வழக்கில் பிணத்தை வீசி எறிய உதவியதாகவும், தடயங்களை மறைக்க உதவியதாகவும் குர்சரண்சிங்கை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சிவசண்முகம், குர்சரண்சிங்கிற்கு 30 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply